NEET - 41 DAYS

 NEET 41 Days. 

பாடம் 14- தாவரங்களின் சுவாசித்தல்- பகுதி 2.

1. சிட்ரிக் அமிலச் சுழற்சி. 

      TCA சுழற்சியின் தொடக்கத்தில் அசிட்டைல் CoA வானது ஒரு நீர் மூலக்கூறினைப் பயன்படுத்தி ஆக்ஸலோ அசிட்டேட்டுடன் இணைந்து சிட்ரேட் அல்லது சிட்ரிக் அமிலம் உருவாகிறது. 

     ஆகவே கிரப்ஸ் சுழற்சியைச் சிட்ரிக் அமிலச் சுழற்சி(CAC) (அ)   ட்ரை கார்பாக்சிலிக் அமில (TCA) சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. 

2. தளப்பொருள் பாஸ்பரிகரணம். 

        எலக்ட்ரான் கடத்துச் சங்கிலியில் நுழையாமல் தளப்பொருளிலிருந்து ATP உருவாக்கப்படும் நிகழ்ச்சி. 

3. இரட்டை நிகழ்வு தன்மை. 

       கிரப்ஸ் சுழற்சி என்பது ஒரு முதன்மையான சிதைவுச் செயல் ஆனால் இது பலவிதமான உயிர் சேர்மங்களின் உற்பத்தி வழித்தடத்திற்குத் தேவையான முன் மூலப் பொருள்களைத் தருவதுடன் சேர்க்கை வழித்தடத்திற்கு உதவும் விதத்தில் இருப்பதால் இந்நிகழ்வை இரட்டை நிகழ்வு என்றழைக்கப்படுகின்றன. 

       இது கார்போஹைட்ரேட்டுகளை மட்டும் ஆக்ஸிஜனேற்றம் செய்யாமல் கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவற்றையும் ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்யும். 

4. எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி. 

     கிளைக்காலைசிஸ் இணைப்பு வினை மற்றும் கிரப்ஸ் சுழற்சி ஆகியவற்றின் சுவாசத் தளப்பொருட்கள் ஆக்சிஜனேற்றத்தின் போது பல படிநிலைகளின் இறுதியில் ஒடுக்க நிலையிலுள்ள இணை நொதிகளான NADH2, FADH2 ஆகியவை உருவாகின்றன. 

       இந்த ஒடுக்க இணை நொதிகள் மைட்டோகாண்ட்ரியத்தின் உட்சவ்விற்கு கடத்தப்பட்டு மீண்டும் அங்கு ஆக்சிஜனேற்ற நிலையிலான இணை நொதிகளாக மாறி, எலக்ட்ரான்களையும் , புரோட்டான்களையும் உண்டாக்குகின்றன. 

5. எலக்ட்ரான் மற்றும் ஹைட்ரஜன் கடத்தல் நான்கு வகையான பல்புரத கூட்டமைப்பு. 

        அ. கூட்டமைப்பு I  - NADH டிஹைட்ராஜினேஸ். 

        ஆ. கூட்டமைப்பு II- சக்சினிக் டிஹைட்ராஜினேஸ். 

       இ. கூட்டமைப்பு III- சைட்டோகுரோம் bc1 கூட்டமைப்பு. 

       ஈ. கூட்டமைப்பு IV-  சைட்டோகுரோம் c  ஆக்ஸிடேஸ்.

6. மைட்டோகாண்ட்ரியத்தில் நிகழும் ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரண இணைவுச் செயலைக் கண்டறிந்தமைக்காக பீட்டர் மிட்செல் என்ற இங்கிலாந்து உயிர் வேதியலாலருக்கு 1978 ல் வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

7. வீரிய சுவாசம். 

        பழுக்கும் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு. என்று. எ.கா. ஆப்பிள், வாழை, மா, பப்பாளி, பேரி.

8. சுவாச ஈவு. 

        சுவாசித்தலின் போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுக்கும் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் அளவுக்கும் உள்ள விகிதம். 

       சுவாச தளப்பொருட்களின் தன்மை மற்றும் அதன் ஆக்சிஜனேற்றத்தை பொருத்து சுவாச ஈவு மதிப்பு மாறுபடும். 

      கார்போஹைட்ரேட்- 1

      காற்றில்லா சுவாசம்- முடிவிலி. 

    சதைப்பற்றுள்ள தாவரங்கள்- 0

    கொழுப்பு அமிலங்கள்- ஒன்றை விடக் குறைவு. 

      கரிம அமிலம்- ஒன்றை விட அதிகம். 

9. நொதித்தல். 

         சில உயிரினங்கள் ஆக்ஸிஜன் அற்ற நிலையில் சுவாசிக்கிறது. இந்த நிகழ்ச்சி நொதித்தல் அல்லது காற்றில்லா சுவாசித்தல் எனப்படும். 

       அ. ஆல்கஹாலிக் நொதித்தல்

      ஆ. லாக்டிக் அமில நொதித்தல்

     இ. கலப்பு அமில நொதித்தல். 

10. சையனைடு எதிர்ப்பு சுவாசம். 

          கனிகளில் வீரிய சுவாசித்தலுக்கு காரணமாக நம்பப்படுகிறது. சையனைடு எதிர்ப்பு சுவாசித்தல் வெப்பத் திசுக்களில் வெப்பத்தை உற்பத்தி செய்பவை யாக அறியப்பட்டுள்ளன. வெப்பத் திசுக்களில் வெப்பத்தை உற்பத்தி செய்யும் அளவு 51 0 C க்கும் அதிகமாக இருக்கலாம். 


கலைச்சொல் அகராதி. 

1. மாலேட் ஷட்டில் வழிமுறை. 

   கிளைக்காலைசிஸிலிருந்து வெளியேறும் எலக்ட்ரான்களை மைட்டோகாண்ட்ரியா வின் உட்சவ்வு பகுதிக்கு ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரண நிகழ்ச்சிக்காக இடம்பெயரச் செய்யும் ஒரு உயிர் வேதிய தொகுப்பு ஆகும். 

2. சில மற்ற தளப் பொருள்களின் சுவாச ஈவு மதிப்புகள். 

     புரதங்கள்- 0.8-0.9

  ஒலியிக் அமிலம் (கொழுப்பு) - 0.71

  பால்மிடிக் அமிலம் (கொழுப்பு) - 0.36

   டார்டாரிக் அமிலம்- 1.6

   ஆக்ஸாலிக் அமிலம்- 4.0


Lesson 14- Respiration in plants- PART 2

Technical points. 

1. Citric acid cycle. 

          The cycle starts with condensation of acetyl CoA with oxaloacetate in the presence of water to yield citrate or citric acid. 

      Therefore, it is also known as Citric acid cycle (CAC) or Tricarboxylic acid (TCA) cycle. 

2. Substrate level phosphorylation. 

       A molecule of ATP synthesis from substrate without entering the electron transport chain. 

3. Amphibolic pathway. 

       Krebs cycle is primarily a catabolic pathway, but it provides precursors for various biosynthetic pathways there by an anabolic pathway. 

      It seves as a pathway for oxidation of carbohydrates, fats and proteins. 

4. Electron transport chain. 

       During glycolysis, link reaction and krebs cycle the respiratory substrates are oxidised at several steps and as a result many reduced coenzymes are transported to inner membrane of mitochondria and are converted back to their oxidised forms produce electrons and protond. 

5. ETC- 4 multiprotein complexes. 

     1. Complex I- NADH dehydrogenase. 

     2. Complex II- succinic dehydrogenase

      3. Complex III- cytochrome bc1 complex. 

      4. Complex IV- cytochrome c oxidase. 

6. Electron transport chain inhibitors. 

      a- 2,4 DNP (Dinitrophenol) - it prevents synthesis of ATP from ADP, as it directs electrons from CoQ to O2. 

      b- Cyanide- It prevents flow of electrons from Cytochrome a3 to O2. 

     c- Rotenone- It prevents flow of electrons from NADH2/FADH2 to CoQ. 

     d- Oligomycin- It inhibits oxidative phosphorylation. 

7. Climacteric. 

       Abnormal rise in respiratory rate of ripening in fruits. Example- Apple, banana, mango, papaya, pear. 

8. Respiratory Quotient. 

       The ratio  of volume of carbon dioxide given out and volume of oxygen taken in during respiration. 

     RQ value depends upon respiratory substrate and their oxidation. 

     RQ for glucose- 1

     RQ for anaerobic- infinity

     RQ for succulent- 0

     RQ for fatty acid- less than one

     RQ for organic acid- more than one

9. Fermentation. 

       Some organisms can respire in the absence of oxygen. This process is called fermentation or anaerobic respiration. 

      a. Alcoholic fermentation

     b. Lactic acid fermentation

     c- mixed acid fermentation

10. Cyanide resistant respiration. 

     Is believed to be responsible for the climacteric fruits. 

     Is known as generate heat in thermogenic tissues. 

     The amount of heat produced in thermogenic tissues may be as high as 51oC.


Glossary. 

1. Malate shuttle mechanism. 

      It is a biochemical system for translocating electrons produced from glycolysis across inner membrane of mitochondrion for oxidative phosphorylation. 

2. Respiratory quotients of some other substances. 

    Proteins- 0.8 to 0.9

    Oleic acid (fat) - 0.71

   Palmitic acid (Fat) - 0.36

  Tartaric acid- 1.6

   Oxalic acid- 4.0


Dr. A. KINGSLIN

Post graduate teacher in Botany

St Mary goretty higher sec school

Manalikarai

Kanyakumari dist

Phone. No. 8925687881

WhatsApp no. 7639128980

Comments

Popular posts from this blog

ECOSYSTEM

XII BOTANY and BIO BOTANY IMPORTANT QUESTIONS.