NEET 42 DAYS

 NEET 42 days. 

பாடம் 14- தாவரங்களின் சுவாசித்தல். 

        பகுதி 1.

 1. சுவாசித்தல். 

        இரவு நேரத்தில் மரத்தின் அடியில் நீங்கள் உறங்கும் போது மூச்சு விடுவதற்குச் சிரமமாக இருப்பதை உணர்வீர்கள். இரவு நேரத்தின் போது தாவரங்கள் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுவதன் காரணமாக மரத்தைச் சுற்றிலும் கார்பன் டை ஆக்சைடு மிகுந்து காணப்படுகிறது. 

   Co2 வெளியிடும் இந்த நிகழ்ச்சி சுவாசித்தல் எனப்படும். 

     இந்த வார்த்தையை பெபிஸ் (1966) என்பவரால் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

2. சுவாசத் தளப் பொருளின் தன்மை. 

      பிளாக்மேன் சுவாசித்தலை இவ்வாறு பிரிக்கிறார்.

      அ. மிதவை சுவாசித்தல்- கார்போஹைட்ரேட் அல்லது கொழுப்பு அல்லது கரிம அமிலம் சுவாச தளப் பொருளாகப் பயன்படுத்தப்படும் வினை. 

    ஆ. புரோட்டோபிளாஸ்ம சுவாசித்தல்- சுவாசத்தின் போது புரதம் சுவாசத் தளப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 

3. ஈடு செய்யும் புள்ளி. 

         அதிகாலை மற்றும் அந்திப் பொழுதில் ஒளியின் செறிவு குறைவாக இருக்கும். சுவாசித்தலின் போது வெளியிடப்படும் Co2 ஒளிச்சேர்க்கையின் போது பயன்படுத்தப்படும் Co2 வை எந்தப் புள்ளியில் ஈடுசெய்கிறதோ அதாவது நிகர வாயு பரிமாற்றம் நிகழாமல் இருக்கும். 

4. ATP. 

     ATP உற்பத்திக்கு சுவாசித்தல் நிகழ்ச்சி காரணமாக உள்ளது. கார்ல் லோமென் (1929) என்பவர் ATP யைக் கண்டறிந்தார். 

      ATP ஒரு நியுக்ளியோடைடு இதில் அடினைன் என்ற காரம், ரைபோஸ் எனும் பெண்டோஸ் சர்க்கரை மற்றும் மூன்று பாஸ்பேட் தொகுதிகள் காணப்படும். 

       செல்லின் ஆற்றல் நாணயம் என்று அழைக்கப்படுகிறது. 

5. Handy mnemonic. 

      LEO என்னும் சிங்கம் கர்ஜிக்கிறது. 

  (LEO the lions says GER). 

LEO- loss of electrons- Oxidation- எலக்ட்ரான்கள் இழப்பு (ஆக்ஸிஜனேற்றம்) 

GER- Gain of Electrons- Reduction- எலக்ட்ரான்கள் ஏற்பு (ஒடுக்கம்). 

6. கிளைக்காலைசிஸ். 

    6 கார்பன் கொண்ட குளுக்கோஸ் இரண்டு மூலக்கூறு 3 கார்பன் கொண்ட பைருவிக் அமிலமாக உடையும் நிகழ்வு. 

       மூன்று அறிவியல் அறிஞர்களான கஸ்டவ் எம்டன் (ஜெர்மனி), ஓட்டோ மேயர்ஹாப் (ஜெர்மனி) மற்றும் ஜே. பர்னாஸ் (போலந்து) ஆகியோர் கிளைக்காலைசிஸ் நிகழ்ச்சியின் வினைகளை ஈஸ்ட் செல்களில் நடைபெறுவதைக் கண்டறிந்தனர். எனவே இது EMP வழித்தடம் எனவும் அழைக்கப்படுகிறது. 

     அ. ஆயத்த நிலை அல்லது ஆற்றல் உள்ளீட்டு வினை அல்லது ஹெக்சோஸ் நிலை. 

      ஆ. விளை நிலை அல்லது ஆக்ஸிஜனேற்ற நிலை அல்லது ஆற்றல் வெளியீட்டு வினை அல்லது டிரையோஸ் நிலை. 

7. உருமாறும் வினை. 

     .. இணைப்பு வினை எனவும் அழைக்கப்படுகிறது. 

         காற்று சுவாசத்தின் போது பைருவேட், இணை நொதி A மற்றும் ஆல்கஹால் டிஹைட்ராஜினேஸ் நொதி கூட்டமைப்பு ஆகியவற்றால் அசிட்டைல் CoA வாக மாற்றப்படுகிறது. 

8. பைருவேட் டிஹைட்ரோஜினேஸ் கூட்டமைப்பில் மூன்று தனிப்பட்ட நொதிகள் உள்ளது. 

     அ. பைருவேட் டிஹைட்ராஜினேஸ். 

      ஆ. டைஹைட்ரோலிப்பாயில் டிரான்ஸ் அசிட்டிலேஸ். 

      இ. டைஹைட்ரோலிப்பாயில் டிஹைட்ராஜினேஸ் மற்றும் ஐந்து வேறுப்பட்ட இணை நொதிகளான TPP (தைமின் பைரோ ஃபாஸ்பேட்), NAD, FAD, CoA மற்றும் லிப்போயேட் ஆகியவை உள்ளன. 

9. செல்லுக்குள் ATP மட்டுமே அதிக ஆற்றல் கொண்ட சேர்மம் அல்ல. வேறுசில அதிக ஆற்றல் கொண்ட சேர்மங்களும் உள்ளன. எடுத்துக்காட்டு- GTP( குவானோசின் ட்ரை ஃபாஸ்பேட்) மற்றும் UTP ( யுரிடின் ட்ரை ஃபாஸ்பேட்). 


கலைச்சொல் அகராதி. 

1. வளர் மாற்றம்/கட்டப்படும் செயல். 

       இது செல்லுக்குள் ஆற்றல் பயன்படுத்துகின்ற எளிய மூலக்கூறு களிலிருந்து சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்கக்கூடிய நொதிகளால் ஊக்குவிக்கும் வினை. 

2. சிதைவு/ மாற்றம் சிதைக்கும் செயல். 

       இது செல்லுக்குள் ஆற்றல் பயன்படுத்துகின்ற சிக்கலான மூலக்கூறு களிலிருந்து எளிய மூலக்கூறுகளை உருவாக்கக்கூடிய நொதிகளால் ஊக்குவிக்கும் வினை. 

3. ஆயத்த நிலை. 

      முதல் பாதி கிளைக்காலைசிஸ் நிகழ்ச்சியில் ஐந்து நொதிகளின் வினைகளால் ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் இரண்டு மூலக்கூறு ATP யை பயன்படுத்தி இரண்டு மூலக்கூறு கிளிசரால்டிஹைடு 3 பாஸ்பேடாக உடையக்கூடிய வினை.



Lesson 14 - Respiration in plants. 

PART- 1

Technical points. 

1. Respiration. 

    If you are sleeping under a tree during night time you will feel difficulty in breathing. During night, plants take up oxygen and release carbon dioxide and as a result carbon dioxide will be abundant around the tree. 

    This process of Co2 evolution is called respiration. 

     The term respiration was coined by Pepys (1966). 

2. Nature of the respiratory substrate. 

     Blackman divided respiration into, 

     a. Floating respiration- when carbohydrate or fat or organic acid serves as respiratory substrate. 

     b. Protoplasmic respiration- respiration utilizing protein as a respiratory substrate. 

3. Compensation point. 

       At dawn and dusk the intensity of light is low. The point at which Co2 released in respiration is exactly compensated by Co2 fixed in photosynthesis that means no net gaseous exchange take place. 

4. ATP. 

       Respiration is responsible for generation of ATP. The discovery of ATP was made by Karl Lohman (1929). 

       ATP is a nucleotide consisting of a base adenine, a pentose sugar ribose and three phosphate groups. 

    Also called as energy currency of the cell. 

5. Handy mnemonic. 

    LEO the lion says GER

LEO- loss of electrons is oxidation. 

GER- Gain of electrons is reduction. 

6. Glycolysis. 

     6 carbon glucose is split into two molecules of 3 carbon pyruvic acid. 

     The reactions  were worked out in yeast cells by three scientists Gustav Embden (German), Otto Meyerhoff (German) and J Parnas( Polish) and so it is called as EMP pathway. 

   1.preparatory phase or endergonic phase or hexose phase. 

    2. Pay off phase or oxidative phase or exergonic phase or triose phase. 

7. Transition reaction. 

      Also called link reaction. 

    In aerobic respiration this pyruvate with coenzyme A is oxidatively decarboxylated into acetyl CoA by pyruvate dehydrogenase complex. 

8. Pyruvate dehydrogenase complex consist of three distinct enzymes, such as

     1. Pyruvate dehydrogenase. 

      2. Dihydrolipoyil transacetylase

      3. Dihydrolipoyil dehydrogenase and five different coenzymes, TPP (Thymine Pyro Phosphate), NAD, FAD, CoA and lipolate. 

9. ATP is not only higher energy compound present in a cell. There are other higher energy compounds also present. Example- GTP (Guanosine Tri Phosphate) and UTP(Uridine Tri Phosphate ). 


Glossary. 

1. Anabolic. 

      It is an enzyme catalysed reaction in a cell that involves synthesis of complex molecules from simple molecules which uses energy. 

2. Catabolic. 

      It is an enzyme catalysed reaction in a cell that involves degradation of molecules into simple subunits which release energy. 

3. Preparatory phase. 

     First half of glycolysis comprising five enzymatic reactions in which one molecule of glucose splitting into two molecules of glyceraldehyde 3 phosphate with consumption of two ATP molecules.


Dr. A. KINGSLIN

Post graduate teacher in Botany

St Mary goretty higher sec school

Manalikarai

Kanyakumari dist

Phone. No. 8925687881

WhatsApp no. 7639128980

Comments

Post a Comment

Popular posts from this blog

XII BOTANY and BIO BOTANY IMPORTANT QUESTIONS.

ECOSYSTEM