NEET 43 DAYS

பாடம் 13- உயர் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை - பகுதி 2.

1. இருள் வினை. 

       ஒளிச்சேர்க்கையின் உயிர்ம உற்பத்தி நிலை என்பது ஒளி வினையின் போது உருவான தன்மயமாக்கும் ஆற்றல்களை (ATP மற்றும் NADPH2)   பயன்படுத்தி கார்பன் டை ஆக்சைடு கார்போஹைட்ரேட்டுகளாக நிலைப்படுத்தும் வினையாகும். 

       இவ்வினையின் முதல் விளைபொருளாக 3 கார்பன் கூட்டுபொருள் (பாஸ்போ கிளிசரிக் அமிலம்) உருவாவதால் இதற்கு C3 சுழற்சி என்று பெயர். 

     மெல்வின் கால்வின், பென்சன் மற்றும் அவர்களின் சகாக்கள் மூலம் 1957 ஆண்டு இந்தக் கார்பன் நிலைநிறுத்தும் வழித்தடமானது கண்டறியப்பட்டது. 

2. இருள் வினையின் மூன்று நிலைகள். 

     அ. கார்பன் நிலைநிறுத்தம்.

      ஆ. கார்பன் ஒடுக்க வினை. 

     இ. மறு உருவாக்கம். 

உள்ளே              வெளியே

6Co2           1 குளுக்கோஸ்

18ATP          18 ADP

12NADPH      12 NADP

3. கிரான்ஸ் உள்ளமைப்பு. 

     கிரான்ஸ் எனும் ஜெர்மன் சொல்லிற்கு ஒளிவட்டம் அல்லது வளையம் என்று பொருள். C4  தாவரங்களில் வாஸ்குலார் கற்றையைச் சூழ்ந்து ஒரு அடுக்கிலான கற்றை உறை காணப்படுகிறது. 

4. இருவகை வடிவுடைய பசுங்கணிகங்கள். 

        C4 தாவரங்களின் சிறப்பு அம்சமாகும். 

       கற்றை உறை செல்களின் பசுங்கணிகங்கள்- இவை பெரிய அளவிலான பசுங்கணிகங்கள். தைலகாய்டுகள் கிரானம் என்ற அமைப்பில் காணப்படுவதில்லை. அத்துடன் ஸ்டார்ச் அதிகம் பெற்ற செல்கள். 

 இலையிடைத் திசு செல்களின் பசுங்கணிகங்கள்- இவை சிறிய அளவிலான பசுங்கணிகங்கள். தைலகாய்டுகள் கிரானம் என்ற அமைப்பில் காணப்படுகிறது மற்றும் ஸ்டார்ச் அற்ற செல்கள். 

5. ஒளிச்சுவாசம். 

       . சில தாவரங்களில் சுவாசித்தல் விகிதமானது ஒளியின் போது அதிகமாகவும் இருளின் போது குறைவாகவும் இருப்பதை டெக்கர் என்பவர் கண்டறிந்தார். 

       ஒளிச்சேர்க்கை நடைபெறும் செல்களில்    Co2 இல்லாதபோது மற்றும் O2 அதிகரிக்கும் போது நடைபெறும் அதிகப்படியான சுவாசம். 

       இச்சழற்சியானது பசங்கணிகம், பெர்ராக்ஸிசோம் மற்றும் மைட்டோகாண்டரியம் என மூன்று செல் நுண்ணுறுப்புகளில் நடைபெறுகிறது. 

6. வரம்பிடு காரணி விதி. 

      பிளாக்மேன் - 1905.

     ஒரு செயலின் வேகத்தை  கட்டுப்படுத்தக்கூடிய பல்வேறு தனித்த காரணிகள் இருப்பினும் அதன் செயல் வீதத்தை கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பது குறைந்தபட்ச காரணியேயாகும்.

       இது லீபிக் அவர்களின் குறைந்த பட்ச விதியினை அடிப்படையாக கொண்டது. 

7. வார்பர்க் விளைவு. 

       ஆக்ஸிஜன் செறிவு அதிகரிக்கும் போது ஒளிச்சேர்க்கை வீதமானது குறைகிறது. இத்தகைய தடுப்பு விளைவினை வார்பர்க் (1920) முதன் முதலில் குளோரேல்லா எனும் ஆல்காவினை பயன்படுத்தி கண்டறிந்தார். 

8. பாக்டீரியங்களின் ஒளிச்சேர்க்கை. 

     இதில் எளிய வகை ஒளிச்சேர்க்கை அமைப்புகளாக குளோரோசோம்கள் மற்றும் குரோமேட்டோஃபோர்கள் உள்ளன. 

     பாக்டீரியங்கள் ஒளிச்சேர்க்கையின் போது ஆக்ஸிஜனுக்கு பதிலாக சல்ஃபர் வெளியேற்றப்படுவதை வான் நீல் (1930) என்பவர் கண்டறிந்தார். 

9. கார்பன் டை ஆக்சைடு ஈடுசெய்யும் புள்ளி. 

       ஒளிச்சேர்க்கை வீதமானது எப்பொழுது சுவாச வீதத்தை சமநிலை செய்கிறதோ அதன் பின்னர் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்டை ஆக்சைடு பரிமாற்றம் நடைபெறுவதில்லை. இச் சமநிலையின் போது சவாசச் செயலின் போது உருவாகும் ஒளிச்சேர்க்கையின் தேவையை ஈடு செய்வதாக உள்ளது. 

10. ஒளிச்செறிவு.

       ஒளியை நோக்கி வளரும் தாவரங்கள்- அவரை. 

     நிழல் நோக்கி வளரும் தாவரங்கள்- ஆக்ஸாலிஸ்.


கலைச்சொல் அகராதி. 

1. ஒளிநாட்டத் தாவரங்கள். 

       ஒளியை தகவமைத்துக் கொண்டு வாழும் தாவரங்கள். 

2. PAR. 

      ஒளிச்சேர்க்கைக்கு தேவையான ஒளியின் அலைநீளம் 400 முதல் 700 அலை நீளத்தில் ஒளிச்சேர்க்கை வீதம் அதிகமாக உள்ளது. 

3. குவாண்டோசோம். 

       ஒளிச்சேர்க்கை செயல்பாட்டிற்கான உருவதோற்ற வெளிப்பாட்டின் அலகுகளாகும். இவை தைலகாய்டு லாமெல்லாக்களின் உட்புறச் சவ்வில் பொதிந்துள்ளன. 

4. குவாண்டம். 

       ஒவ்வொரு போட்டான்கள் பெற்றிருக்கும் ஆற்றலுக்கு குவாண்டம் என்று பெயர். 

5. குவாண்டம் தேவை. 

      . ஒளிச்சேர்க்கையின் போது ஒரு ஆக்ஸிஜனை வெளியேற்ற தேவையான போட்டான்கள் அல்லது குவாண்டாக்களின் எண்ணிக்கை. 

6. குவாண்டம் விளைச்சல். 

      ஒரு குவாண்டம் ஒளி பயன்படுத்தப்படும் போது உருவாகும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளின் எண்ணிக்கை. 

7. ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள். 

       ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள். 

8. ருபிஸ்கோ. 

     ரிபுலோஸ் பிஸ் பாஸ்பேட் கார்பாக்ஸிலேஸ் மற்றும் ஆக்ஸிஜினேஸ் நொதி, ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் டை ஆக்சைடினை நிலைநிறுத்தம் செய்கிறது. இதுவே இவ்வுலகில் அதிகமாக காணப்படும் புரதம் ஆகும்.

NEET- 43 days. 

Lesson 13- Photosynthesis in Higher plants- part 2

Technical points. 

1. Dark reaction. 

        Biosynthetic phase of photosynthesis utilises assimilatory  powers (ATP snd NADPH2) produced during light reaction are used to fix and reduce carbon dioxide into carbohydrates. 

     The first product of the pathway is 3 carbon componund PGA and so it is also called as C3 cycle. 

     M. Melvin Calvin, A. A. Benson and their coworkers in the year 1957 found this pathway of carbon fixation. 

2. Three phases of Dark reaction. 

     a. Carboxylation(Fixation) 

    b. Glycolytic reversal/reduction

    c) Regeneration

In                            out

 6 Co2                1 glucose

  18ATP              18 ADP

   12NADPH        12 NADP

3. Kranz anatomy. 

      It is the German term meaning a halo or wreath. In C4 plants vascular bundles are surrounded by a layer of bundle sheath. 

4. Dimorphic chloroplast. 

      The characteristic feature of C4 plants. 

Bundle sheath of chloroplast- Larger chloroplast, thylakoids not arranged in granum and rich in starch. 

Mesophyll chloroplast- smaller chloroplast, thylakoids arranged in granum and less starch. 

5. Photorespiration. 

      Decker (1959) observed that rate of respiration is more in light than in dark. 

      It is the excess respiration taking place in photosynthetic cells due to absence of CO2 and increase of O2. 

    It takes place in chloroplast, peroxisome and mitochondria. 

6. Law of limiting factor. 

       Blackmann - 1905.

    ' When a process is conditioned as to its rapidity by a number of separate factors, the rate of the process is limited by the pace of the lowest factor'. 

     Modified by Liebig. 

7. Warburg effect. 

       This inhibitory effect of oxygen was first discovered by Warburg (1920) using green algae Chlorella. 

8. Photosynthesis in Bacteria. 

      Photosynthetic apparatus called chlorosomes and chromatophores. 

     Van Niel discovered a bacterium that releases sulphur instead of oxygen during photosynthesis. 

9. Carbon dioxide compensation point. 

      When the rate of photosynthesis equals the rate of respiration, there is no exchange of oxygen and carbon dioxide. 

10. Intensity of light. 

      Sun loving plants- Heliophytes- Bean plant

      Shade loving plants- Sciophytes- Oxalis. 


Glossary. 

1. Heliophytes. 

      Plants which are adapted to light. 

2. PAR. 

      The wavelength at which the rate of photosynthesis is more is called photosynthetically active radiation which falls between 400 to 700nm.

3. Quantasome. 

      Morphological expression of physiological photosynthetic units, located on the inner membrane of thylakoid lamellae. Act as photosynthetic unit contains 200 to 300 chlorophyll molecules. 

4. Quantum. 

     The energy contained in a photon is represented as quantum. 

5. Quantum requirement. 

      The number of photons or quanta required to release one molecule of oxygen during photosynthesis. 

6. Quantum yield. 

       The number of oxygen molecules produced per quantum of light absorbed. 

7. Redox reactions. 

      Oxidation and Reduction reactions are called redox reactions. 

8. RUBISCO. 

       Enzyme responsible for fixation of carbon dioxide, the most abundant protein. (Ribulose 1,5 bisphosphate carboxylase oxygenase).


Dr. A. KINGSLIN

Post graduate teacher in Botany

St Mary goretty higher sec school

Manalikarai

Kanyakumari dist

Phone. No. 8925687881

WhatsApp no. 7639128980

Comments

Popular posts from this blog

ECOSYSTEM

XII BOTANY and BIO BOTANY IMPORTANT QUESTIONS.