NEET 10 DAYS- LESSON 33- Biotechnology- part 2.
பாடம் 33- உயிரி தொழில்நுட்பவியல்- பகுதி 2. 1. உட்செருகுதல் செயலிழப்பு. நீலம் வெண்மை காலனி தேர்வு முறை. இது மறுகூட்டிணைவு பிளாஸ்மிட்டை சலிக்கைச் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு திறன் மிக்க முறையாகும். இம்முறையில் lac Z என்ற ரிப்போர்ட்டர் மரபணு ஐ தாங்கிக்கடத்திக்குள் செருகப்படுகிறது. இந்த lac Z காலக்டோசிடேஸ் என்ற நொதிக்கு குறியீடு செய்கிறது. மேலும் இது தடைகட்டு நொதிக்கு பல அடையாளக் களங்களை கொண்டுள்ளது. 2. பையோலிஸ்டிக். நுண்ணிய தங்க அல்லது டங்ஸ்டன் துகள்களால் பூச்சு செய்யப்பட்ட அயல் DNA இலக்கு திசு அல்லது செல்களின் மீது துகள் துப்பாக்கியை (மரபணு துப்பாக்கி/ நுண் எறிதல் துப்பாக்கி/ வெடிப்புத் துப்பாக்கி) பயன்படுத்தி அதிக விசையுடன் செலுத்தப்படுகிறது. 3. Spooling. சுழற்சியின் மூலம் DNA வை பிரித்தெடுக்கலாம். லைசோசோம்- பாக்டீரியா செல்லுலேஸ்- தாவர செல்கள் கைட்டினேஸ்- பூஞ்சை. 4. பாலி...