NEET 40 days. பாடம் 15- தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் - பகுதி 1. 1. வளர்ச்சி. அளவு, வடிவம், எண்ணிக்கை, பருமன் மற்றும் உலர் எடையில் மாற்றமடையாத நிலையான அதிகரிப்பு . தாவர வளர்ச்சியில் செல் பகுப்பு, செல் நீட்சியடைதல், வேறுபாடு அடைதல் மற்றும் முதிர்ச்சியடைதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 2. தாவர வளர்ச்சியின் பண்புகள். செல் அளவில் புரோட்டோபிளாசம் அதிகரிக்கிறது. தொடர்ச்சியான செல் பகுப்பினால் தண்டு மற்றும் வேர்கள் வளர்ச்சியில் வரம்பற்று காணப்படுகின்றன. இது திறந்த வகை வளர்ச்சி என அழைக்கப்படுகிறது. இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் வரம்புடைய வளர்ச்சி அல்லது நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி அல்லது மூடிய வகை வளர்ச்சி உடையது. 3. வளர்ச்சி இயங்கியல். தேக்கக் கட்டம் மடக்கைக் கட்டம் வீழ்ச்சிக் கட்டம் முதிர்ச்சிக் கட்டம் அல்லது நிலைக் கட்டம் 4. வளர்ச்சி வீதத்தின் வகைகள்....